புதன், ஏப்ரல் 07, 2010

ஏப&
07

வேணாம், இந்த IPL வேணாம்..!

2
'பத்து மணிக்கு  படுத்து, ஆறு மணிக்கு எழும்பி' நல்லாத்தானேய்யா போய்க்கிட்டுருந்துச்சு! இப்ப பத்து பதினொன்னாகி ,பன்னிரண்டாகி.....கருமம் கனவுலயும் அனுஷ்காவுக்கும், த்ரிஷாவுக்கும் பதிலா இந்த ஃபோரும் சிக்ஸருமா வந்து கடுப்பேத்த‌‌....
வேணாம்,   தூக்கத்துக்கு ஆப்படிச்ச‌ இந்த IPL வேணாம்!

கோபி நாத்துக்கும், அல்கா அஜித்துகளுக்கும் ரிசர்வ் பண்ணி வச்சிருந்த அந்த 'நைன்' டூ 'லெவன' கொண்டுப்போயி  (மொங்கூசு) பெட்டுலயும் , சியர் லீடர்ஸ் இடுப்புலயும் அடகு வெச்சாச்சு. அம்போன்னு உக்காந்திருக்கிற அம்மா 'இவன் செனல்ல மாத்தமாட்டான்'னு எழும்பி போறப்ப‌ அந்த (மொங்கூசு) பெட்டயே புடுங்கி தலையில அடிச்சுக்கத் தோணும்.
அதனால‌....
வேணாம்,   அம்மாக்களுக்கு புடிக்காத இந்த IPL வேணாம்!


ஆறுமணிக்கு 'மெட்ச்சா பாக்குற மெட்ச்சு, எழும்படா மோனே'ன்னு அலறுற அலாரத்தோட‌ சேத்து நேத்து வெளையாடின ரெண்டு டீமையும் அசிங்க, அசிங்கமா திட்டிட்டு (தேங்ஸ் டூ ஹர்பஜன் சிங், சிறீசாந்த் ) கண்ண‌ லேசா மூடுனா ஆபிஸ் டிரான்ஸ்போர்ட்ட‌ விட்டுட்டு   ஆட்டோக்காரனுக்கு அழுகுற‌ 100 ரூவா நோட்டு பல்லக்காட்டி இழிக்க.....
வேணாம், 'ALARM CLOCK' அ சுக்கு நூறாக்குன இந்த IPL வேணாம்!

அடிச்சு புடிச்சு ஆபிஸ் வந்து சேந்து 'BOSS'க்கு 'குட் மோர்னிங்' வச்சா அடிவாங்கி அழுத சிறீசாந்த் கண‌க்கா செவந்துக்கெடந்த கண்ணப்பாத்து அவரு கேட்டது 'நைட்டு பார்ட்டியா?'ன்னு. அதனால..
வேணாம், எங்க 'BOSS' பாக்காத‌ இந்த IPL வேணாம்!


அதே எரிச்சலோட‌  'FACEBOOK' அ தெற‌ந்தா அவனவன் ரவி சாஸ்திரி கணக்கா நடந்த மெட்ச்ச ப‌த்தி ஆராச்சி ப‌ண்ணி வச்சிருக்க அதயும் மிச்சம் வைக்காம  இந்த எழவெடுத்த‌ கண்ணு துருவி, துருவி ஆராய‌.....
வேணாம்,  இந்த 'FACEBOOK IPL' வேணாம்!


கடைசியா எட்டுக்கே இவ்வளவு எழவாயிருக்கே, இன்னும் பத்து வந்துச்சுன்னா....
வேணாம், அடுத்த IPLலும்  வேணாம்!





Related Posts with Thumbnails
 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner