பூங்காவின் மடியில் பூவை அவள்.
விடிந்திருந்தது, ஆம் அவள் விழித்திறந்திருந்தாள்.
பூக்களின் மேல் பனித்துளிகள் தானே வழக்கம்; பனித்துளிகள் மேல் பூ அவள், புதுமை தான்!
கன்னியவள் கரங்களின் அரவணைப்பில் புதுக்கவிதையொன்று.
ஆஹா, புதிர்க்கவிதை கைகளில் புதுக்கவிதை!
அவள் விரல்கள் கவிதைத்தாளை வருட, விழிகள் கவிதையை வருடத்தொடங்கின..
அவள் கவிதை வாசிக்க...அல்ல, வடிக்கத்தொடங்கியிருந்தாள்.
அவள் விழிகள் விரிந்தன, கூடவே கவிதையின் விழிகளும்!
கன்னியவள் இமை உயர, கவிதைத் தலை குனிந்தது.
அவள் இதழசைவின் 'ஹைக்கூ'வில் புதுக்கவிதை புழுங்கல் கவிதையானது.
எதுகை நயமும், மோனை நயமும் அவளது விழி அபிநயத்தில் சிக்கித்தவிக்க, கவிதையின் எண்ணம் அவள் கன்னத்து வண்ணத்தில் கரைந்துப் போயிற்று.
அவளது உள்ளங்கை உவமைகளை ஊமையாக்கியது.
சொல்லும், பொருளும் அவள் விரல்களின் ஸ்பரிஷத்தில் சிலிர்த்துப் போயிருக்க,
கவிதையின் தலைப்பு ஓடிச்சென்று அவள் நெற்றிப்பொட்டின் பின்னால் ஒளிந்துக்கொண்டது.
சரிந்து விழுந்த அவளது முடிக்கீற்றில் கவிதையின் கரு தற்கொலை செய்து கொள்ள,
முதலிடக் கவிதை அவள் முன்னழகில் மூர்ச்சையானது.
வெட்கித்தலை குனிந்து, அவள் விரல் விட்டு விடைப் பெற்ற கவிதை சொல்லாமல் சொல்லிற்று,
அவள் விழி பார்த்து
'கவி மொழியால் மட்டுமல்ல, (உன்) விழியாலும் எழுதலாமென்று'!
பூங்காவிற்கு புரியவில்லை,
'கவிதை வாசித்தது அவளா, இல்லை
கவிதை வாசித்தது அவளையா' என்று!
கன்னி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கன்னி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், மார்ச் 08, 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)